
தையிட்டியில் மீண்டும் போராட்டம்
தையிட்டி விகாரைக்கு அண்மையில் மீண்டும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
தையிட்டியில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு, பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்த நிலையிலேயே இந்தப் போராட்டம் நேற்று மாலை ஆரம்பமாகியுள்ளது.
இன்று 3 ஆம் திகதி போயா தினம் என்பதால் இந்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் போராட்டமானது இன்றையதினமும் தொடரவுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சுலோக அட்டைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
CATEGORIES செய்திகள்

