ரணிலுக்கு ஜெய்சங்கர் பாராட்டு

ரணிலுக்கு ஜெய்சங்கர் பாராட்டு

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்த இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வியாழக்கிழமை புதுடில்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் கே.ஜெய்சங்கரை சந்தித்தார்.

இச்சந்திப்பில், பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளுக்காக பாராட்டுக்களை தெரிவித்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை இலங்கைக்கு வருகை தருமாறு செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்ததோடு, இலங்கை, இந்தியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )