
விபத்தில் சிக்கினார் விஜயகலா அவருட்பட நால்வர் படுகாயம்
புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை இடம் பெற்ற விபத்தில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட நால்வர் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையல் சிகிச்சை பெற்ற வருவதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வேன் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் 107 ஆம் மைல் கல் பகுதியின் வீதியோரத்தில் இருந்த மரங்களுடன் மோதுண்டுள்ளது.இந்த விபத்தின் போது வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தள்ளது.
இதன் போது முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுடன் வேனில் பயணித்த மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.இவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். விஜயகலா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இவ் விபத்து தொடர்பான விசாரனைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

