
மொட்டு தரப்பினருக்கு கோட்டா முறையில் அமைச்சுப் பதவி !
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை கட்டாயம் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அமைச்சுப் பதவிகள் கிடைக்காமல் கவலையடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துடன் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும், அதற்கமைவாக எதிர்வரும் சில தினங்களில் இந்தக் கலந்துரையாடல்கள் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்டங்களில் முதல் விருப்புரிமை பெற்றவர்களுக்கு முழு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் கோட்டா முறையில் அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
எப்படியாவது கட்சிக்கு அமைச்சு பதவிகளை பெறுவதே எமது எதிர்பார்ப்பு. இதனை நாங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
சமமாக அமைச்சு பதவிகள் பகிரப்படும் வகையிலேயே இறுதி பேச்சுவார்த்தை நடத்தி, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்போம் எனக்கூறியுள்ளார்.

