
7 ஆம் திகதி அரசுக்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 7 ஆம் திகதி கொழும்பில் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அனைத்து பல்கலைக்கழக மணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அந்த சங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும், மாணவர்கள் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த போராட்டம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களையடுத்து கொழும்பில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரச கட்டிடங்கள் அமைந்துள்ள இடங்களில் விசேட பாதுகாப்பை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

