
நடாஷாவுக்கும் ஞானசாரருக்கும் ஏன் வேறுவேறு சட்டங்கள் ?
பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டால் முஸ்லிம்களையும் இந்துக்களையும் இழிவுபடுத்திய ஞானசார தேரர் தொடர்பில் என்ன செய்வீர்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
பௌத்தத்தை அவமதித்ததாகக் கூறி நடாஷா கைது செய்யப்பட்டார். இஸ்லாம், தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மசூதிகளை எரித்த ஞானசார தேரர் தொடர்பில் என்ன செய்வீர்கள்?
முஸ்லிம்களுக்கும் தமிழ் குடிமக்களுக்கும் எதிராக வெறுப்புப் பேச்சை பரப்பியமை நடாஷாவின் வார்த்தைகளை விட மோசமானது. டொக்டர் ஷாபி பற்றி பொய்களை சூழ்ச்சி செய்து நாடு முழுவதும் பரப்பி ஒரு நல்ல மனிதனின் வாழ்க்கையை சீரழித்த அயோக்கியர்களை பற்றி என்ன சொல்வது ?
இன்னும் தாமதிக்காமல் குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க ஜனாதிபதி விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அதுதான் உண்மையான ஜனநாயக ஆட்சியாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

