
தேர்தலுக்கு நிதியை கோரி நீதிமன்றத்திற்கு செல்லும் தேசிய மக்கள் சக்தி
நாட்டில் பணமில்லை என்பதால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதியை ஒதுக்க முடியாது எனக்கூறி தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரம் தற்போது செல்லுப்படியாகாது என்பதால் உடனடியாக தேர்தலுக்கு நிதியை ஒதுக்க தேவையான பின்னணியை உருவாக்குமாறு கோரி தேசிய மக்கள் சக்தி உயர் நீதிமன்ற்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு பாதிப்புகளை ஏற்படுத்திய விடயங்கள் தற்போது மாறியுள்ளதால், நிதி ஒதுக்கீடு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தில் தேர்தல் ஆணைக்குழுவை உள்ளடக்க முடியாது.
குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேவையான வகையில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க முடியாது.உடனடியாக தேர்தலை நடத்துவதற்கான நிதியை தற்போது ஒதுக்க வேண்டும்.அந்நிய செலாவணி கையிருப்பும் இலங்கை ரூபாவும் வலுவாக இருப்பதாக கூறுவார்கள் எனில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.
தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் 8 ஆம் திகதியில் இருந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தும்.தேர்தலை நடத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி ஏற்கனவே இரண்டு வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
அந்த வழக்குகளின் தீர்ப்புகள் வரும் வரை காத்திருப்பதாகவும் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.

