தமிழர்களின் அறிவுப் புதையல் யாழ். நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 42 ஆண்டுகள்; நினைவேந்தல் அனுஷ்டிப்பு

தமிழர்களின் அறிவுப் புதையல் யாழ். நூலகம் தீக்கிரையாகி இன்றுடன் 42 ஆண்டுகள்; நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 42ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது இன்று காலை 9.30 மணியளவில் யாழ் நூலகத்தில் இடம்பெற்றது.

நூலக எரிப்பு நினைவு கூரலுடன் நூலகத்தின் தோற்றுவாய்க்குக் காரணமான செல்லப்பா மற்றும் நூலக எரிப்பு செய்தியறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாரையும் நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறிப்பாக 1981 யூன் 1ம் திகதி கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலகமாகக் காணப்பட்ட யாழ் பொது நூலகமானது கிட்டத்தட்ட 97000 நூல்களுக்கு மேல் எரியூட்டப்பட்டது.

இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் யாழ் மாநகரசபை ஆணையாளர் ஜெயசீலன், நூலக ஊழியர்கள், நூலக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )