
வாசகியின் மடல்
எழுநிலமே..!!
நீ
மேன்மேலும் எழுவாய்!!
தடைகள் பல தாண்டி
மூன்றாவது அகவையில்
கால் பதிக்கும் உன்னை
வாழ்த்துவதில்
மட்டற்ற மகிழ்ச்சியே!
உன் ஒவ்வொரு இதழும்
மணம் கவிழும் என்
முற்றத்து மல்லிகையே!
உன் ஆக்கங்கள்
அனைத்தும் பயனுள்ளவையே!
எத்தனை தடைகள்
வரினும்…
அத்தனையும் கடந்து..
ஆழமான நம்பிக்கையோடு
நீ பயணிக்கும் பாதை..
ஆல் போல் தழைத்து,
அறுகு போல் வேரூன்றி,
மூங்கில் போல் உயர
என் மனமார்ந்த
வாழ்த்துகள்!!
-வாசகி.
CATEGORIES இலக்கியம்