முள்ளிவாய்க்காலில் தொலைந்தது!!

முள்ளிவாய்க்காலில் தொலைந்தது!!

முள்ளிவாய்க்கால் மண்ணில்
முழுவதும் தொலைந்து போக…
குற்றுயிரும் குலையுருமாக
நாதியற்று அன்று நாம்
நின்றோமே….!!

வீரமே உருவான எம் மண்….
மீண்டும் மூன்று தசாப்த
காலம் கடந்து….
உலகத்தின்
ஒருமித்த சூழ்ச்சி வலைப்பின்னலில்
சிக்கி….
இனவெறி அரசின்
கோரத் தாண்டவத்தில்….
இழந்தோமே
எம் தேசத்தை..!!

பசுமை நிறைந்த
சோலை வனமான நம் பூமி..
கொடியவர் பொழிந்ந
குண்டுமழையில் சிக்கி,
சுடுகாடாய் மாறியதே…!
சுதந்திர காற்றினை
சுவாசித்த
எம் தேசம்
துரோகத்தின் உச்சத்தால்
சாம்பல் மேடானதே…!!

ஒரு பிடி சோற்றுக்காய்…
பசித்த வயிற்றுடன்
கஞ்சிக்காய் காத்திருந்த
பொழுதுகளில்….
வீழ்ந்த எறிகணையில்
உடல் சிதறி பலியாக
புதைத்திடவும் வழியின்றி
நாதியற்று நின்றோமே!!

எடுத்து இயம்பிட முடியா
கோரத் தாண்டவமாடி
மக்களுக்கான யுத்தமென
வாய் கூசாமல் செப்பிட
எப்படி முடிகிறது?

பதினான்கு ஆண்டுகள்
கடந்தும்
நீதிக்கான
எம் குரல்கள்
யார் செவியிலும்
விழவில்லை..
எம்
உணர்வுகள் மாறவேயில்லை..!!

உயிர்ப் பலியான அத்துணை
ஆன்மாக்களின்
கூக்குரல் ஓலம்
எப்போதும் காதில்
ஒலிக்கும்…
விலங்கினை சுமக்கும்
தமிழீழ அன்னையவள்
மீண்டும் எழுவாள்!!
மீண்டும் வருவாள்…!!
மீண்டு வருவாள்!!

-அம்முக்குட்டி.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )