
அதிகார மோதல் வலுக்கிறது; அமைச்சர்கள் -இராஜாங்க அமைச்சர்கள் முறுகல் !
தங்களுக்கான பொறுப்பு சரியாக மாற்றப்படாததால் பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை அமைச்சர்கள் தங்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்காததால் இராஜாங்க அமைச்சர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஓரிரு சிறு நிறுவனங்களைத் தவிர சில அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களுக்கு அதிக பொறுப்புகளை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலைமையால் பல இராஜாங்க அமைச்சர்கள் அமைச்சுகளு க்குச் சென்று வீணாக அலைக்கழிய வேண்டியுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனால், அமைச்சரவை அமைச்சர்களுக்கும், இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் சில சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளும் உருவாகி முறுகல் நிலையும் ஏற்பட்டுள்ளன.
தற்போது 22 அமைச்சரவை அமைச்சர்களும் 38 இராஜாங்க அமைச்சர்களும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

