
வடக்கு ஆளுனர் சாள்ஸின் நியமனத்தில் அரசியல்
தேர்தல் ஆணைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் திருமதி சார்ள்ஸ் சமீபத்தில் ராஜினாமா செய்தார். தற்போது அவர் வடக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ராஜினாமா மற்றும் ஆளுநர் பதவிக்கான நியமனம் அரசியல் காரணங்களுக்காக செய்யப்பட்டது என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறதுஎன தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த ஊடக வியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில்,
தேர்தல் ஆணைக்குழு செயற்படவில்லை என்பதற்குப் பலமான ஆதாரம் திருமதி சார்ள்ஸ் பதவி விலகி ஆளுநராக நியமிக்கப்பட்டமையே. தேர்தல் ஆணைக் குழு உள்ளது. ஆனால் அது வலுவாக செயல்படாத நிலையே இன்று உள்ளது என்றும் தெரிவித்தார்.
இதேவேளை தேர்தல் ஆணைக் குழுவில் இருந்த திருமதி சார்ள்ஸ் அதில் இருந்தபோது உள்ளுராட்சித் தேர்தலை ஒத்திவைப்பதை மறைமுகமாக ஆதரித்ததைப் பாருங்கள்.ஆனால் அவர் பதவி விலகிய பின்னர் இன்று வடக்கு ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.இதனைப் பார்க்கும் போது என்ன தெரிகிறது என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

