புத்தாண்டு இரவும் மறுநாளும் இருவர் சுட்டுப் படுகொலை; இரண்டு சிறுவர்கள் காயம்

புத்தாண்டு இரவும் மறுநாளும் இருவர் சுட்டுப் படுகொலை; இரண்டு சிறுவர்கள் காயம்

புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை இரவு மற்றும் மறுநாள் சனிக்கிழமை இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் இறந்துள்ளனர் .
சீதுவை – ராஜபக்சபுர பகுதியில் வெள்ளி இரவு ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வலுப்பெற்றதை அடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, 45 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலை தொடர்பில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அஹூங்கல – மித்தரமுல்லயில் சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 29 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சிறு காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )