நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக 5 இடங்களில் மாபெரும் பேரணி;  19 ஆம் திகதி தொடங்கி 21 கொழும்பை வந்தடையும்

நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக 5 இடங்களில் மாபெரும் பேரணி; 19 ஆம் திகதி தொடங்கி 21 கொழும்பை வந்தடையும்

அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எதிர்வரும் 19 ஆம் திகதி நாட்டின் மிக முக்கியமான 5 இடங்களில் அரசுக்கு எதிரான மாபெரும் பேரணிகளை நடத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார அறிவித்துள்ளார்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் இந்த போரணி எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பேரணியின் இறுதியில் நாட்டையே ஆட்டிப்படைக்கும் வகையில் பல உண்மைகள் வெளியாகும் . உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இனவாத நடவடிக்கைகள் என்பவற்றின் பின்னணி தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகும் என்று ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி என்ற வகையில் தாம் பலமாகவுள்ளதாகவும் 21ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கவுள்ளதாக ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்துள்ளார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )