சஜித்தை விட்டு விலகும் சம்பிக்க; அடுத்த மாதம் புதிய கட்சி ஆரம்பிக்கிறார்

சஜித்தை விட்டு விலகும் சம்பிக்க; அடுத்த மாதம் புதிய கட்சி ஆரம்பிக்கிறார்

அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினராக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், ஆனால் அவர் சில காலமாக அக்கட்சியுடனான அரசியல் ஒப்பந்தங்களில் இருந்து பிரிந்து செயல்பட்டு வருகிறார்.இந்நிலையிலேயே அடுத்த மாதம் புதிய அரசியல் கட்சியை உருவாக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பில் பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ´ஜாதிக ஜனரஜ பெரமுன’ (ஐக்கிய குடியரசு முன்னணி) என பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அடுத்த மே மாதம், நாட்டில் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும், ஏனெனில் இந்த நாட்டை இந்த திவால் நிலையிலிருந்து காப்பாற்ற, தகுதி அடிப்படையிலான அரசியல் கட்சி தேவை. மேலும், குடும்ப பரம்பரை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.பணத்துக்காக ஆதாயம் பெறும் அரசியலை மாற்ற வேண்டும்.

காலாவதியான சோசலிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு பதிலாக புதிய நடைமுறைவாதத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

சோசலிசம் மற்றும் முதலாளித்துவத்திற்கு பதிலாக புதிய நடைமுறைவாதத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசியல் சித்தாந்தம் வேண்டும். அதை மே மாதம் வெளிக்கொணருவோம். அதுவே ´ஜாதிக ஜனரஜ பெரமுன´ எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )