தீர்வுக்கான பேச்சுக்கு அரசு தரப்பில்  சொல்ஹெய்ம் அனுசரணை என்றால் இந்தியாவுக்கும் இடமளிக்க வேண்டும் அவர்கள் சார்பில் ஒருவரை அனுசரணையாளராக முன்மொழிவோம் என்கிறார் விக்னேஸ்வரன்

தீர்வுக்கான பேச்சுக்கு அரசு தரப்பில் சொல்ஹெய்ம் அனுசரணை என்றால் இந்தியாவுக்கும் இடமளிக்க வேண்டும் அவர்கள் சார்பில் ஒருவரை அனுசரணையாளராக முன்மொழிவோம் என்கிறார் விக்னேஸ்வரன்

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் எரிக்சொல்ஹெய்ம் அரச தரப்பால் அனுசரணையாளராக நியமிக்கப்படுவதாக இருந்தால் எங்கள் தரப்பில் இருந்து இந்தியா சார்பில் ஒருவரை அனுசரணையாளராக முன்மொழிவோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறு அரச தரப்போடு பேசிய பின்னர் அனுசரணையில் ஈடுபடப் போவதில்லை என எரிக்சொல்ஹெய்ம் அவசரமாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

எரிக்சொல்ஹெய்மை மட்டும் பேச்சுக்கான அனுசரணையாளராக அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுசரணையாளர்கள் இடம்பெறுவதாக இருந்தால் அது இந்தியா உள்ளிட்ட பல்வேறு தரப்பு அனுசரணையாளர்களை உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )