IMF உடன்படிக்கைக்கு முன்னதாக 16,000 இராணுவ வீரர்களை குறைக்கும் அரசாங்கம் !

IMF உடன்படிக்கைக்கு முன்னதாக 16,000 இராணுவ வீரர்களை குறைக்கும் அரசாங்கம் !

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் 16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.

இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்திருந்தார்.

அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதிவரை முப்படையில் இல்லாதவர்களை அந்தந்த சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றும் வகையில் பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் சரியான அறிவிப்பை வழங்காத வெளிநாட்டில் இருப்பவர்களும் தத்தமது சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தானாக முன்வந்து சேவையை விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் அனுமதித்தமைக்கு இணங்க தற்போது இராணுவப் பேச்சாளர் ரவி ஹேரத் உட்பட இதுவரை 16,141 பேர் அதற்காக விண்ணப்பித்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )