தேர்தலை விரைவில் நடத்தவேண்டும்: இரா.சம்பந்தன்

தேர்தலை விரைவில் நடத்தவேண்டும்: இரா.சம்பந்தன்

பொதுத் தேர்தலை விரைவில் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தவறாக நாட்டை நிர்வகித்த ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஸ போராட்டத்தின் விளைவாக பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்ட போது, துரதிர்ஷ்டவசமாக ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், பொதுத் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் எனவும் இதன்மூலம் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை பின்பற்றி வருகின்றார் என தாம் கருதுவதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )