சாணக்கியனின் மக்கள் சந்திப்பு காரியாலத்தின் பெயர் பலகை சேதம்!

சாணக்கியனின் மக்கள் சந்திப்பு காரியாலத்தின் பெயர் பலகை சேதம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலத்தின் பெயர் பலகையை அடையாளம் தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த பெயர் பலகையை சேதமாக்கப்பட்டுள்ளது என முறைப்பாடு செய்யப்பட்டதாக மட்டு. தலைமைக பொலிசார் தெரிவித்தனர்.

காரியாலயம் பூட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு நாடாளுமன்ற உறுப்பினரின் புகைப்படம் தாங்கிய காரியாலய சந்திப்பு திகதியிடப்பட்ட பெயர்பலகையில் ஒட்டப்பட்டிருந்த பெயரை இனம் தெரியாத விசமிகால் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )