
சிறப்புக் குழந்தைகள்
சமர்த்துக் குழந்தைகளாக துறுதுறுவென ஓடி விளையாடினால் ‘சுட்டிக் குழந்தை’ என இரசிக்கிறோம் நாம்.ஐம்புலன்களால் துல்லியமாக உணர்ந்து வித்தியாசமாக நடந்து கொள்ளும் சிறப்புக் குழந்தைகள் பற்றி இச் சமூகம் கண்டு கொள்வதில்லை. பிள்ளைகள் வளர்ப்பினைக்ஒரு குறையாகக் கூறி,சமூகத்தின் மத்தியில் பெற்றோரைக் குறை கூறுபவர்களைப் புறந்தள்ளி நாம்இச் சிறப்பு குழந்தைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
சிறப்புக் குழந்தைகள் என்றால் யார்?
உடல்வளர்ச்சிஅடிப்படையில் ஊனம், தசை சிதைவு,வலிப்பு,பார்வைக் குறைபாடு, காது கேட்காத,வாய் பேசாத,மனவளர்ச்சியின் அடிப்படையில் ஆட்டிசம்,டிஸ்லெக்ஸியா எனக் கற்றல் குறைபாடுகளுடன்,சம வயதுக் குழந்தைகளிடம் சேர்ந்து பழகுவதில் கோபப்படும் வித்தியாசமான மனநிலைகளை உடையகுழந்தைகளையே நாம் சிறப்புக் குழந்தைகள் என்கிறோம்.
சில குழந்தைகள் பிறக்கும் போது சாதாரணமானவர் போலக்காணப்படுவர். ஆனால் இக் குழந்தைகளின் அறிவு சம்மந்தமான வளர்ச்சிகளை உன்னிப்பாக கவனிப்பதன் மூலம் இவர்கள் மற்றக் குழந்தைகளிலிருந்து சற்று வேறுபடுவதைக் கண்டறியலாம்.
இப்படியான குழந்தைகளில் தென்படும் மாற்றம் பெரும்பாலும் ஐந்து,ஆறு வயதிலேயே வெளித் தெரிகின்றது.இக் குழந்தைகளை சமூகத்தில் மற்றவர்களுடன்ஒன்ற வைப்பது என்பது மிகவும் கடினமான பணியே.இக் குழந்தைகளின் ஐம்புலன்களும் சாதாரண குழந்தைகளை விட பன்மடங்கு மேலானவை.நம் கண்ணுக்கு புலப்படாத வித்தியாசமான ஒரு பொருள் அல்லது காட்சிஇக் குழந்தைகளுக்கு சிறப்பாக புலப்படும் என்கிறது அறிவியல்.
இவர்களின் குறைபாடுடைய புலனை ஈடு செய்வதுபோல மற்றைய புலன்கள் கூர்மையாக வேலை செய்வதால், இவர்களால் பல அசாதாரண விசயங்களை உணர முடியும், அசாதாரணமாகச் செயலாற்ற முடியும். நாம் பிடிக்கவில்லை எனும் சுவை அவர்களுக்கு பிடிக்கும். எமது சிறிய தொடு உணர்வு கூட பெரும் தொடுகை போல அவர்களுக்குத் தோன்றும்.இதனாற்தான் சில வேளைகளில் இவர்கள்எதிர்த் தாக்குதல் செய்தல்,திடீரென ஒன்றி நடத்தல்,வலியின்றி வீறாப்பாய் நிற்றல் அசாதாரண செயல்களைப் பிரதிபலிப்பாகக்காட்டுகின்றனர்.

தமக்குத் தேவையானவையைச் சொல்லத்தெரியாமல், கோபப்படுவது,சிரிப்பது, மௌனமாய் இருப்பது என்பதை தவிர வேறு உலகம் அறியாதவர்கள் இவர்கள்.நாம் அழைக்கும் போது பேசாமல் இருப்பது,எது வேண்டும் என்பதைச் சொல்லத் தெரியாமல் இருப்பது,தாம் பழகிய பொருட்களிற்கூட அளவு கடந்த பிரியம் வைத்து அப்பொருட்களைத் தம்கூடவே வைத்திருப்பது என்று எப்போதும் இக் குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் அதிகமாக வேலை செய்து கொண்டிருப்பவர்கள்போலத் தென்படுவர்.
‘ஆட்டிசம்’ எனப்படுகின்ற ஏதோவொரு புலன் வளர்ச்சி குன்றிய அல்லது இன்னொரு வகையில் மற்றப் புலன்களின் கூர்மையான செயற்பாடுள்ள இக் குழந்தைகள் மற்றக் குழந்தைகளைப் போல் செயற்படாது, சில சமயங்களில் தமக்குத் தோன்றியதையே செய்யும் இயல்பு பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதனால் இவர்களை மந்தமான குழந்தைகள் என்றோ அல்லது எதிலும் ஈடுபாடு இல்லாமல் தமது எண்ணப்படிஇருப்பவர்கள் என்றோ சமுதாயம் புறக்கணிக்க முடியாது.
பெற்றவர்களும் சமுதாயமும் சற்றுக் கூடுதல் அக்கறை எடுத்து இவர்களைக் கவனித்து, அவர்களிற்கிடையில் ஒழிந்து கிடக்கும் தனித்திறமையைத் தட்டிக் கொடுப்பதன் மூலம் இவர்களை சமுதாயத்தில் தற்துணிவுடன் வாழ வைக்க முடியும். இவர்களுக்கு இருப்பது ஒரு அறிவு இறுக்கம். இவர்கள் உலகம் தனி உலகம்.பெற்றோர்களே இவர்களுக்கு எல்லாம்.அத்துடன், இவர்கள் பயன்படுத்தும் சாதாரணப் பொருட்கள்தான் இவர்களின் வாழ்க்கை.இவ் ஆட்டிசக் குறைபாட்டை”ஸ்பெக்ட்ரம் டிஸ் ஆர்டர்”என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவர்களை நூறுவீதம் குணப்படுத்த முடியாவிட்டாலும்,சில தொடர் பயிற்சிகள் மூலமும்,சில மருந்துகள் மூலமும் சீரான நிலைக்கு கொண்டு வர முடியும். சாதாரண குழந்தைகளை விட இவர்கள் கூடிய புலனுணர்வு கொண்டவர்கள் ஆதலால் தமது இடத்தைவிட்டு,வேறு இடங்களுக்கு செல்லும் போது,அந்த இடத்தின் சூழலை அசவுகரியமாக உணர்ந்து,அதற்கு எதிராக சமூகத்தை விட்டு ஒதுங்கி இருக்கின்றனர்.
சில பெற்றோர்கள் தமது குழந்தைகள் ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானதை அறிந்ததும் விரக்தி,பயம்,திகைப்பு, இயலாமை என்று மனவருத்ததிற்கு
ஆட்படுகின்றனர். இது இயல்பானதுதான். ஆனால், ‘ஐயோ எனது பிள்ளை இப்படியாகி விட்டதே’ என்று மனம் வருந்தி காலத்தை வீண்டிக்காமல், அவர்களுக்கு ஆதரவாக இருந்து அவர்கள் வளர்ச்சிக்கான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும். இக்குழந்தைகளினுள் ஒழிந்திருக்கும் திறமையும் மேதாவித்தனமும் உங்களை பிரமிக்க வைக்கும்.
குழந்தையின் நாளாந்த வாழ்க்கை முறையை இலகுவாக்கும் பயிற்சி,சமூக ஒருங்கிணைப்புப் பயிற்சி,சமூகத்துடனான தொடர்பாடல் முறை, பேச்சுப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி,சம வயதுக் குழந்தைகளுடன் ஒன்றித்துப் பழகும் பயிற்சியெனஎத்தனையோ உதவும் கரங்கள் இக் குழந்தைகளுக்காகவே உள்ளன. சரியான, குழந்தையின் மனதிற்குப் பிடித்த இடத்தை பெற்றவர்கள் தெரிவு செய்ய வேண்டும்.அடிப்படைக்பயிற்சிகளை வழங்க வேண்டும். ஊக்குவிப்பும் அன்பும் ஆதரவும் இந்தக் குழந்தைகளின் வாழ்வை பல மடங்கு மேம்படுத்தும்.விஞ்ஞானி ஜன்ஸ்டீன்,கணனி வல்லுனர் பில்கேட்ஸ்,நடனக் கலைஞர் மைக்கல் ஜாக்சன் போன்றவர்களும் ஆட்டிசம் குறைபாட்டுடன்தான் சாதனையாளர்களாக உருவெடுத்தவர்கள்என்பதை அறியும்போது ஒரு நம்பிக்கை உருவாகிறது அல்லவா?
–கலை