மஹிந்தவின் மீதான அன்பால் தம்பதியினர் செய்த செயல்; அரசியல் நண்பர்களால் கொழும்பில் அடிக்கவிருக்கும் அதிர்ஷ்டம்

மஹிந்தவின் மீதான அன்பால் தம்பதியினர் செய்த செயல்; அரசியல் நண்பர்களால் கொழும்பில் அடிக்கவிருக்கும் அதிர்ஷ்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க குருநாகல், கல்கமுவவிலிருந்து தங்காலைக்கு மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்த ஒரு தம்பதியினர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தம்பதியினர் சுமார் ஆறு மணித்தியாலங்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்றுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்து பின்னர் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷவின் மீதான அன்பின் காரணமாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்ததாகக் குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவின் சுக துக்கம் குறித்து விசாரிப்பதற்காக தாம் வந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அவரது அரசியல் நண்பர்கள் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல சொகுசு வீடுகளை வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளை வழங்க முன்வந்த அரசியல் நண்பர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைய கொழும்புப் பகுதியில் வசிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

அந்த வீடுகளில் எந்த வீட்டைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )