செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் – எடுக்கப்பட்டது சட்ட நடவடிக்கை

செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் – எடுக்கப்பட்டது சட்ட நடவடிக்கை

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய ஐந்து வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்ட அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சட்டமா அதிபரின் வழிகாட்டுதலைப் பெறுவதற்காக இந்த அறிக்கைகள் அனுப்பப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், அனைத்து வேட்பாளர்களும் விரிவான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய மேலும் 13 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு மேலும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தொடர்புடைய வேட்பாளர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )