
அம்மா!!
(பவானி)
அம்மா ஏன் அம்மா_நீ
இப்படி ஆனாய்?
உன்னை இந்நிலைக்கு
ஆளாக்கியது விதியின் வேலையா?
அன்று நீ – அம்மா
அழகான ஆண்பிள்ளை
இரண்டைப்பெற்று
பாலூட்டி சீராட்டி
பாசமெல்லாம் பொழிந்து
உயிராக வளர்த்தாயே…!!
பொத்திப் பொத்தி வளர்த்த
பிள்ளைகள்
புன்னகையோடு
பூரிப்பாய்
வளர்ந்த போது மகிழ்வோடு
வளமாய் வாழ வழி – நீ
சமைத்தாய்.
உனையுருக்கி மெழுகாகி
வாழ ஒளியானாய்…!
இன்று
நிழல்தர மரங்கள் ஏதுமின்றி
நிம்மதி வாழ்க்கை
தானிழந்து
தள்ளாத வயதிலும்
நீ
தன்னம்பிக்கையோடு
வாழ்கிறாய் இன்று…!!
உன்னை நினைக்கும் போதிலே
உயர்வாய் எண்ணத்
தோன்றுதம்மா!!
தன்னம்பிக்கை துணையாக
வாழ்வதில் நீ
மகாராணியம்மா!!
தன்மானம் உள்ள தாயே!
உன் பிள்ளைகள்
வெட்கப்படுவார்…
உன் உறுதி கண்டு.
சாலையோரம் மரம்
நடுபவர் அதன்
பயனை எதிர்பார்ப்பதில்லை…
சுயநலமற்ற தாயும்
எதனையும் எதிர்பார்ப்பதில்லை…
பெற்றவர் மனதை
நோகடிக்காத பிள்ளைகள் கிடைப்பது
வரம்….!!
இது எல்லாருக்கும்
அமைவது இல்லை.
அமைந்தால்….?
முதியோர் இல்லம்
தேவை இல்லை….!!

