சிறுமி ஆயிஷா கொலையாளியின் மற்றுமொரு குற்றச்செயல் அம்பலம்

சிறுமி ஆயிஷா கொலையாளியின் மற்றுமொரு குற்றச்செயல் அம்பலம்

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர், தொடர்பிலும் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் அப்பகுதியிலுள்ள பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக நேற்று தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட தகவல் மூலம் அம்பலமாகி உள்ளது.

குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் இரகசியமாக சென்ற சந்தேக நபர், அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் தெரிவிக்கையில், நான் முன்பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தேன். இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கும் போது இந்த நபர் வீட்டிற்குள் நுழைந்து எனது வாயை அடைத்தார். நான் கண்டு விழித்தேன். என்னை கயிற்றால் கட்ட முயன்றார். நான் கத்தினேன். அவர் உடனடியாக ஓடிவிட்டார்.

இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

அப்போது பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஆயிஷாவுக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்காது என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )