விபத்தில் தாயும் மகளும் பலி; தந்தையும் மகனும் படுகாயம்

விபத்தில் தாயும் மகளும் பலி; தந்தையும் மகனும் படுகாயம்

அனுராதபுரம் கவரக்குளம் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி கால்வாய் ஒன்றுக்குள் புரண்டு விழுந்ததில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக கவரக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று முற்பல் நடந்த இந்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தை மற்றும் மகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் தம்புள்ளையில் இருந்த அனுராதபுரம் நோக்கி சென்ற போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டி கால்வாய்க்குள் விழுந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து கவரக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )