
ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடக்கும்; ஜனாதிபதி அதில் உறுதி
ஜனாதிபதித் தேர்தல் குறித்த காலத்தில் கட்டாயம் நடக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைய ஜனாதிபதி தேர்தல் குறித்த கால எல்லைக்குள் கண்டிப்பாக நடக்கும் எனவும் அதனை ஒத்திவைக்க அரசாங்கத்திற்கு எந்த நோக்கமும் இல்லை எனக் கூறிய நிமல் லான்சா, அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனநாயகத்தை பாதுகாத்து ஜனாதிபதித் தேர்தலை குறித்த கால எல்லைக்குள் நடாத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி அளித்துள்ளதுடன் அதுவே அரசாங்கத்தினதும் நிலைப்பாடாகும் எனக் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலையோ பாராளுமன்ற தேர்தலையோ இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க முன்மொழியவோ கருத்துத் தெரிவிக்கவோ எவருக்கும் முடியும்.அது அவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றி அரசின் நிலைப்பாடல்ல.
குறித்த நேரத்தில் அரசியலமைப்பிற்கு ஏற்ற வகையில் தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது தேர்தல் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என்றார்.