
தொழில் சட்ட மறுசீரமைப்பை உடனடியாக நிறுத்துங்கள்; இலங்கையிடம் மன்னிப்புச் சபை உட்பட அமைப்புகள் கோரிக்கை
புதிய தொழில் சட்டத்திற்கான தற்போதைய முன்மொழிவுகளை நிறுத்துமாறும், தொழிலாளர்களுடனும் அவர்களது பிரதிநிதிகளுடனும் முறையான கலந்தாலோசனைக்குப் பின்னரே தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும் ஏனைய அமைப்புக்களுடன்இணைந்து சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் அவசரமாக கோரிக்கை விடுத்துள்ளது.
“சர்வதேச குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் உரிமைகளை அகற்றுவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்து நாங்கள் எங்கள் தீவிர கவலைகளை வெளிப்படுத்துகிறோம்” என்று உரிமைகளுக்கான குழு தெரிவித்திருக்கிறது .
உடனடி தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும்எழுதியுள்ள ஒரு திறந்த கடிதத்தில், உரிமைகளுக்கான கூட்டமைப்பு கவலைகளை எழுப்பியுள்ளது, முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் முறையான ஆலோசனையின்றி செயற் படுத்தப்பட்டால், சர்வதேசரீதியில் குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் உரிமைகளை நீக்குவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புகளை பலவீனப்படுத்தும்மென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
சர்வதேச மன்னிப்புச் சபை, கிளீன் கு ளோத் கம்பெய்ன் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவை இலங்கை தொழிலாளர் சட்டங்களில் உடனடியானதும் மிகப்பெரிய துமான மாற்றங்கள் குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்துகின்றன.
“இந்த மாற்றங்கள் முன்வைக்கப்பட்டால் -இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் எதிர்காலம் – தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் வர்த்தக நாமங்களின் மனித உரிமைகள் இடர் மதிப்பீடுகள் மற்றும் பொறுப்பான ஆதாரங்களை எவ்வாறு எதிர்மறையாக பாதிக்கலாம் -என்று நாங்கள் அஞ்சுகிறோம்.”
தற்போதைய சீர்திருத்த செயல்முறையை உடனடியாக நிறுத்தவும், தொழிலாளர் சட்டங்களில் தேவையான மறுசீரமைப்புகள் தொடர்பான கூடுதல் புதிய நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனையின் பின்னரே எடுக்கப்படுவதை உறுதிசெய்யவும் வேண்டுமென அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.
இலங்கையில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பரந்த கூட்டினால் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்பட்ட போராட்டங்கள் மற்றும் எழுப்பப்பட்டவற்றை கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்ட கவலைகள் பிரதிபலிக்கின்றன பின்பற்றுகின்றன” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட வரைவுச் சட்டத்தில் சர்வதேச குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் உரிமைகளை அகற்றுவதன் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் பல சரத்துகள் உள்ளனவெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது , மேலும் இந்த நகல் வரைவுச் சட்டத்தில் சர்வ தேச தொழிலாளர் அ மையத்துடனா ன உடன்படிக்கையின் இலக்கம் எண் 87, 98 144, மற்றும் 190என இலங்கை சர்வதேச சட்டத்திற்கு இணங்குவதை அச்சுறுத்தும் ஷரத்துகள் உள்ளன
“வரைவுச் சட்டத்தை விவாதிப்பதற்கும் நிறைவேற்றுவதற்கும் முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் எந்தத் தெளிவும் இல்லை என்றாலும், உத்தேச தொழிலாளர் குறியீடு விரைவில் பாரா ளுமன்றத்தில் வாக்களிக்க வைக்கப்படலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.”
“குற்றம் இல்லாத ஆடைகள்” என்ற சுலோகத்துடன் இலங்கையின் ஆடைத் தொழில்துறையானது ஏனைய ஆடை உற்பத்தி நாடுகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள முயற்சித்துள்ளது.
“உடனடியாக மேற்கொள்ள வி ருக்கும் சீர்திருத்தங்கள், இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகளை மிக மோசமான குறைந்தளவு வேதனம்மற்றும்மிக மோசமான நிலைக்கு மாற்றும் அபாயம் உள்ளது” என்று அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன
“எனவே, தற்போதுள்ள தொழிலாளர் மறுசீரமைப்பு செயல்முறையை உடனடியாக நிறுத்திவிட்டு மாற்று செயல்முறையை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எனவே, தற்போதுள்ள தொழிலாளர் சீர்திருத்த செயல்முறையை உடனடியாக நிறுத்திவிட்டு மாற்று செயல்முறையை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அந்த மாற்று செயல் முறையானது வெளிப்ப டையானதும் கருத்தொருமைபாட்டை அடிப்படியாக கொண்டதும் சம்பந்தப்பட்ட முத்தரப்பினரை உள்ளடக்கியதும் கலந்தாலோசனை ,உரைபெயர்ப்பு, பிரசுரிப்பு தொடர்பாக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் ஜனநாயக நடவடிக்கைகளை எதிர்கொள்வதாகவும் அத்துடன் தொழிலாளர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தங்கள்வேலையில் திறமையான பங்கேற்பை செயல்படுத்துவதாக இருக்கவேண்டும்.