Category: Uncategorized

Uncategorized

இந்தியாவில் இதுவரை 4,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலி

Editor- June 5, 2025

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ... Read More

ஐ-ஒன் இன் சிறப்பு புகைப்படத்தை மோடிக்கு வழங்கிய சஜித்
Uncategorized

ஐ-ஒன் இன் சிறப்பு புகைப்படத்தை மோடிக்கு வழங்கிய சஜித்

Editor- April 6, 2025

வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த "ஐ-ஒன்" (eye-one) என அழைக்கப்படும் பெண் புலியின் இந்த சிறப்பு புகைப்படத்தை, 2025 ஏப்ரல் 5ஆம் திகதியான இன்று, இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர ... Read More

வட கிழக்கிற்கு உடனடியாக உதவிகளை வழங்குங்கள்; கனேடிய தமிழ் காங்கிரஸ் அழைப்பு
Uncategorized

வட கிழக்கிற்கு உடனடியாக உதவிகளை வழங்குங்கள்; கனேடிய தமிழ் காங்கிரஸ் அழைப்பு

Editor- November 30, 2024

கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசியமான உடனடி உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் கனேடிய தமிழ் காங்கிரஸ், அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இயலுமான நன்கொடைகளை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து புலம்பெயர் தமிழர் அமைப்பான கனேடிய தமிழ் காங்கிரஸ் மேலும் தெரிவித்திருப்பதாவது: நாட்டின் வட, கிழக்கு மாகாணங்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக தீவிர நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை ஆயிரக்கணக்கான மக்களை உடனடி உதவிகள் தேவைப்படும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இந்த இயற்கை அனர்த்தத்தின் விளைவாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்திருப்பதுடன், மேலும் பலர் வெளிச்செல்ல முடியாமல் வீடுகளுக்குள் சிக்கியிருக்கிறார்கள். இந்நெருக்கடிக்கு மத்தியில் சிறுவர்கள், நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்கலாக பெருமளவானோர் உணவு, தூய நீர், மருந்துப் பொருட்கள் முதலான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாம் வட, கிழக்கு பொருளாதார அபிவிருத்தி நிலையத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசியமான உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம். குறிப்பாக, சிறுவர்களுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும், உதவிகள் சென்றடைய முடியாத பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் தேவையான நிவாரணப் பொருட்களையும், ஏனைய உதவிகளையும் வழங்குவதிலேயே நாம் விசேட கவனம் செலுத்தியிருக்கிறோம். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உணவு மற்றும் தூய குடிநீர், மருந்துப் பொருட்கள், தற்காலிக தங்குமிடம், ஆடைகள் முதலிய உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உங்களது ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். இந்த சவால் மிகுந்த தருணத்தில் உங்களால் வழங்கப்படும் சிறிய உதவியும், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே, https://www.gofundme.com/f/support-flood-relief-efforts-in-north-and-east-sri-lanka என்ற இணையதளத்தினுள் பிரவேசிப்பதன் ஊடாக, நன்கொடை உதவிகளை வழங்குவது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும் என கனேடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. Read More

Uncategorized

துணை முதலமைச்சர் பதவி குறித்து மனம் திறந்தார் உதயநிதி ஸ்டாலின்!

Editor- September 19, 2024

”துணை முதலமைச்சர் குறித்து முடிவெடுக்கும் உரிமை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மாத்திரமே உண்டு” என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ... Read More

Uncategorized

கட்சித் தீர்மானத்தை சிறீதரனும், மாவையும் ஏற்றுள்ளனர்: சஜித்திற்கு ஆதரவளிப்பதில் மாற்றமில்லை என்கிறார் சுமந்திரன்

Editor- September 14, 2024

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கட்சியின் நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்யுமாறு மாவை சேனாதிராஜா மற்றும் ... Read More

பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்
Uncategorized

பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்

Editor- August 4, 2024

வடமேற்கு இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். 13 வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் பதிவாகியுள்ள மோசமான குழப்ப நிலை இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ... Read More

பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் முன்மொழியுமா காட்டமான புதிய பிரேரணை: முடிவடைகிறது இலங்கை தொடர்பான ஐ.நாவின் தீர்மானம்
Uncategorized

பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் முன்மொழியுமா காட்டமான புதிய பிரேரணை: முடிவடைகிறது இலங்கை தொடர்பான ஐ.நாவின் தீர்மானம்

Editor- July 29, 2024

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும் அதன் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கும் அளிக்கப்பட்டுள்ள ஆணையை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் ... Read More