போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மக்களுடன் நாம் உறுதியான பங்காளியாக இருக்கின்றோம்

போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மக்களுடன் நாம் உறுதியான பங்காளியாக இருக்கின்றோம்

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒன்றுபட்ட எதிர்காலத்திற்கான நெகிழ்ச்சியை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் ஐக்கிய அமெரிக்கா துணை நிற்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் தனது எக்ஸ் வலைத்தளத்தில் இட்ட பதிவில் அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில்,

தொடர்ந்து நீதி, சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை தேடுபவர்கள் உட்பட இலங்கை மக்களுக்கு நாங்கள் உறுதியான பங்காளியாக இருக்கிறோம். நிலையான சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான பன்முகத்தன்மையை உள்ளடக்கிய வளமான எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு ஆதரவளிப்பதற்கான எமது உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )