திருமலையில் கஞ்சி காய்ச்சிய பொது மக்களை தடுத்த பொலிஸார்; வாக்குவாதத்தில் மக்கள்

திருமலையில் கஞ்சி காய்ச்சிய பொது மக்களை தடுத்த பொலிஸார்; வாக்குவாதத்தில் மக்கள்

திருகோணமலையில் பொது மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் போது பொலிஸார் இன்று ஞாயிற்று கிழமை அதனை தடுக்க முயற்சித்துள்ளனர்.

சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியிலேயே பொதுமக்கள் சிலர் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த போது சம்பூர் பொலிஸார் அங்கு வருகைதந்து நீதிமன்ற தடையுத்தரவைக் காட்டி தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்தோர் பொலிஸாரால் வழங்கப்பட்ட நீதிமன்ற தடையுத்தரவை பெறுவதற்கு மறுத்ததோடு வேறும் யாரையும் நாம் நினைவுகூறவில்லை உயிரிழந்த பொதுமக்களுக்காகவே இதனை செய்கின்றோம் என பொலிஸாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )