
காட்டுச் சட்டத்துக்கு தயாராகும் ஜே.வி.பி.
தாம் ஆட்சிக்கு வந்தால் தமது கட்சியினருக்கு நீதித்துறை அதிகாரம் வழங்குவோம் என ஜே.வி.பி கூறியுள்ளமை, கிராமங்களில் மீண்டும் காட்டுச் சட்டத்தை ஏற்படுத்துவதற்குத் தயார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. 88/89 சகாப்தத்தில் ஜே.வி.பி மக்களைக் கொன்று கிராமங்களில் காட்டுச் சட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்தியது என்பது மக்களுக்கு நன்றாக நினைவிருக்கும் என அரச தரப்பு பிரதாக கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கம்பஹா இரண்டாவது பிராந்திய அலுவலகத்தை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கும் நிகழ்வில்உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
அந்தக் காலத்தில் ஜே.வி.பி., கிராமத்துக்குச் சட்டத்தைக் கொண்டு வந்து அப்பாவி மக்களின் கை, கால்களை வெட்டி கொலை செய்தது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அந்த குழுக்களுக்கு மீண்டும் அதிகாரத்தை கொடுத்தால், அந்த பயங்கரமான சகாப்தம் மீண்டும் பிறக்கும். எனவே இந்தக் கதையை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆட்சியைப் பெறுவதற்காக கொலை செய்தவர்கள் ஆட்சியைப் பிடித்த பிறகும் அதே திட்டத்தைச் செய்ய முயற்சிக்கின்றனர்.
நாங்கள் மக்களை மனதில் வைத்து வேலை செய்யும் போது, எங்கள் எதிரிகள் தங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் வேலை செய்தனர். வெளிநாடு சென்று இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறினர். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் சென்று பேச்சுக்களை நடத்துகிறார். ஆனால் அநுரகுமார என்ன செய்கிறார். அவர் வெளிநாடுகளுக்கு செல்லும் பொது அங்குள்ளவர்கள் கட்சிக்கு கொடுக்கும் பணத்தை பொக்கெட்டில் தனது போட்டுக் கொள்கின்றார்
இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேர்தல் இல்லாமல் இப்படியே இருப்போம் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி அவ்வாறு செய்ய முடியாது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் ஜனாதிபதி தேர்தல் உள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரு தலைவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவருவது மக்களின் பொறுப்பு என்றார்.

