பசில் விடுத்த அழைப்பு; மொட்டு தரப்பு அவசர சந்திப்பு

பசில் விடுத்த அழைப்பு; மொட்டு தரப்பு அவசர சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டனர்.

கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ச அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, பொதுஜன பெரமுனவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் நேற்று முற்பகல் 10.45க்கு நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடினர்.

சமகால அரசியல் நிலவரம் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஜனாதிபதியுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்களும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )