
செங்கலடி சந்தியில் மின் கம்பத்துடன் மோதி கடை தொகுதியில் உட்புகுந்த பஸ் ; 5 பேர் படுகாயம்
கல்முனையில் இருந்து மகரகம நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மட்டக்களப்பு செங்கலடி சிக்னல் சந்தியில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி மின்பிறப்பாகியை உடைத்து கடை தொகுதியில் புகுந்து விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலனறுவை டிப்போவுக்கு சொந்தமான இந்த பஸ் சம்பவதினம் இரவு 12 மணிக்கு கல்முனையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக மகரகமவுக்கான பிரயாணித்த போது செங்கல சிக்கினல் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி மின்கம்பத்துடன் மோதி மின்பிறப்பாக்கியை உடைத்துக் கொண்டு கடை தொகுதிக்குள் உட்புகுந்தது விபத்துக்குள்ளானது.
இதில் சாரதி, நடத்துநர் உட்பட 5 பேர் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

