ஜனாதிபதி பங்காளி கட்சிக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும்

ஜனாதிபதி பங்காளி கட்சிக்கு ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக தலையீட்டு தனது பங்காளி கட்சிக்கு கண்ணியமாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அறிவுரை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செல்லமுத்து என்ற நபரும் அவரது மகன்களும் சேர்ந்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருக்கு எதிராக புஸ்ஸல்லாவையில் தாக்குதல் நடத்த முயன்றனர்.

இது ஒரு ரவுடித்தனம் இது ஒரு தொழிற்சங்க போராட்டமா அல்லது ரவுடித்தனமா என கேட்க விரும்புகிறேன் வேலுகுமாரிடம் கண்டி மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரிடம் புகார் செய்யுமாறு கேட்டு இருக்கிறேன் என தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )