10 அமைச்சர்கள் உட்பட மொட்டின் 12 எம்.பி.க்கள் ரணிலுடன் இணைவர்

10 அமைச்சர்கள் உட்பட மொட்டின் 12 எம்.பி.க்கள் ரணிலுடன் இணைவர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதை தடுப்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 அமைச்சர்கள் உட்பட 12 எம்.பி.க்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைவதற்கு தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, செஹான் சேமசிங்க, ரமேஷ் பத்திரன, காஞ்சன விஜேசேகர, பிரமித்த தென்னகோன், அலி சப்ரி, எஸ்.பி.திஸாநாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, பந்துல குணவர்தன, சுசில் பிரேமஜயந்த மற்றும் விதுர விக்ரமநாயக்க ஆகியோர் இவ்வாறு இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதன்மூலம் கட்சியின் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன் அரசாங்கத்திற்குள் இருக்கும் அதிகார சமநிலையை மாற்றியமைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதை தடுக்கும் முயற்சியில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாகவும் இந்த செயற்பாடுகள் கட்சியின் ஒற்றுமைக்கு பாதகமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், இவ்வாறான கட்சி தாவல்கள் இலங்கையின் ஆட்சி மற்றும் அரசியல் நிலைப்பாட்டில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துமெனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )