காணாமல் போயிருந்த பாத்திமா ஆய்ஷா சடலமாக மீட்பு

காணாமல் போயிருந்த பாத்திமா ஆய்ஷா சடலமாக மீட்பு

காணாமல் போயிருந்த 9 வயது பாத்திமா ஆய்ஷா சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி (27) காலை 10 மணியளவில் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தொலைவிலுள்ள கடையொன்றுக்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக சென்றுள்ளார்.

ஆனால் அவள் வீடு திரும்பவில்லை. கடைக்கு அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் அவர் கடைக்கு வருவதும், மீண்டும் வெளியே செல்வதும் பதிவாகியிருந்தது.

சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு மேலதிகமாக பாணந்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் சடலம் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் இருந்த நிலையில் பிரதேசவாசிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )