
முதலில் வரும் தேர்தலை அறிவித்தார் பிள்ளையான்
என்னைப் பொறுத்த வரையில் ஜனாதிபதி தேர்தல்தான் முதலில் வரும் அதன் பின்னர் பாராளுமன்ற பொது தேர்தல் இடம் பெறும் சில நேரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் பொது மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் வந்தாலும் தாம் சந்திக்க தயாராக உள்ளோம் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பில் செவ்வாய்கிழமை(09) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்தை தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து அரசியல் செய்தவர்கள் என்ற வகையில் நட்பு ரீதியில் பழகியவர்கள் அரசியலில் எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்களாக அவர்களை அவதானிக்கின்றோம். நமது கட்சியானது பிராந்திய ரீதியில் அரசியல் பணிகளை முன்னெடுக்கும் கட்சி என்ற வகையில் எமது முடிவுகளை மக்களின் நலன் கருதி எடுப்போம்.
என்னைப் பொறுத்த வரையில் ஜனாதிபதி தேர்தல்தான் முதலில் வரும் அதன் பின்னர் பாராளுமன்ற பொது தேர்தல் இடம் பெறும் சில நேரங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் மக்களின் நலனில் அக்கறையுள்ள கட்சி என்ற வகையில் எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் வந்தாலும் தாம் சந்திக்க தயாராக உள்ளோம். இலங்கை வரலாற்றில் நம்பிக்கையுடன் வந்த ஜனாதிபதி தோற்று வெளியேறினார் என்பது முக்கியமான அடையாளமாக பதியப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் எவ்வாறான குழப்பங்கள் வந்தாலும் வராமல் போனாலும் எவ்வாறான நிலைமைகள் வரும்போதும் நாம் அதனைச் சந்திக்க தயாராக உள்ளோம்.