இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இயற்கை வளங்கள் துறையின் பேராசிரியர் மெத்திகா விதானகே தற்போது தனது பணியிடத்திற்கு துவிச்சக்கர வண்டியில் செல்வதனை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்.

தனது உடல்நிலையை மேம்படுத்துவதற்கும், நாடு எதிர்நோக்கும் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கும் மாற்றாகவும் தான் சைக்கிளை தெரிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் எரிபொருள் தட்டுப்பாடு, நீண்ட வரிசை, கட்டுப்பாடற்ற எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் சோர்வடைந்த பலர் தற்போது துவிச்சக்கர வண்டியின் பக்கம் திரும்பியுள்ளனர். அவர்களில் வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

எனினும் துரதிர்ஷ்டவசமான நிலையாக தற்போது சைக்கிள்களின் விலை இரண்டு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

சிலர் பழைய சைக்கிள்களை வீட்டிலேயே சரி செய்து மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ள போதிலும் சந்தையில் சைக்கிள் உதிரிபாகங்கள் தட்டுப்பாடு அதற்கும் தடையாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள நடைமுறை சிக்கல்களைக் குறைத்து, துவிச்க்கர வண்டி ஓட்டுதலை மீண்டும் ஊக்குவிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டுமென துவிச்சக்கர வண்டி தொடர்பான சங்கங்கள் கேட்டுக்கொள்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )