”சிவராத்திரி”யை பகலில்  நடத்தக் கூறிய பொலிஸார்

”சிவராத்திரி”யை பகலில் நடத்தக் கூறிய பொலிஸார்

பௌத்தர்களின் பொசன் தின நிகழ்வை பகலில் நடத்துமாறு பொலிஸாரினால் கூற முடியுமாவெனக்கேள்வி எழுப்பிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆனால் இந்துக்களின் ”சிவராத்திரி” யை பகலில் நடத்துமாறு பொலிஸார் கூறுகின்றனர். இதுதான் இலங்கை பொலிஸாரின் நீதி எனவும் சாடினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு சாடிய

அவர் மேலும் பேசுகையில்,

வெடுக்கு நாறி மலைஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி யை அனுஷ்டிக்க இந்துக்களுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தபோதும் பொலிஸார் அனுமதி மறுத்தனர். வழிபாட்டுக்கு அனுமதித்தால் அங்குள்ள தொல்பொருட்கள் சேதமடையும் என்றால் அனுமதித்துவிட்டு அவற்றுக்கு சேதம் ஏற்படாமல் பொலிஸார் பார்த்திருக்க வேண்டும். அத்துடன் அங்கு சுவன் கோவிலே உள்ளது. எனவே தமது கோவிலையே இந்துக்கள் சேதப்படுத்த மாட்டார்கள். என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, இந்தப்பிரச்ஹசினையை நீங்கள் பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தபோது இரு மணித்தியாலங்களுக்குள் நாம் வழங்கினோம். எனவே ஏன் அதனை மறுபடியும் பேசுகின் றீர்கள் எனக்கேட்டார்.

இதற்கு சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.பதிலளிக்கையில் , அவ்வாறானதொரு பொலிஸ் அராஜகம் மீண்டும்நடக்கக்கூடாது என்பதற்காகவே நான் இங்கு பேசுகின்றேன் பௌத்தர்களின் பொசன் தின நிகழ்வை பகலில் நடத்துமாறு பொலிஸாரினால் கூற முடியுமாவெனக்கேள்வி எழுப்பிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆனால் இந்துக்களின் ”சிவராத்திரி” யை பகலில் நடத்துமாறு பொலிஸார் கூறுகின்றனர். இதுதான் இலங்கை பொலிஸாரின் நீதி என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )