
சாணக்கியனை நான் தாக்க முயலவில்லை
சாணக்கியன் எம்.பி.யை நான் பாதுகாப்பாக பிரதமரிடம் அழைத்து செல்லவே லிப்டுக்கு (மின்தூக்கி ) அருகில் வருமாறு அழைத்தேன் என அரச தரப்பு எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது சபைக்குள் வந்த இரா. சாணக்கியன் எம்.பி. அரச தரப்பு எம்.பி. யான ரோஹித அபேகுணவர்தன பிரதமர் அலுவலகத்தில் வைத்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்து,என்மீது தாக்குவதற்கு முயற்சித்தார். இதனால் பாராளுமன்றத்தில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது .ஆகவே இச்சம்பவம் தொடர்பில் சிறப்புரிமை மற்றும் ஒழுக்காற்று குழு ஊடாக விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென பிரதி சபாநாயகரிடம் வலியுறுத்திய நிலையிலேயே இவ்வாறு தெரிவித்த ரோஹித அபேகுணவர்தன எம்.பி. மேலும் கூறுகையில்,
பிரதமரை சந்திக்க வந்த தன்னை நான் தாக்க முற்பட்டதாக சாணக்கியன் எம்.பி கூறி சிறப்புரிமை மற்றும் ஒழுக்காற்று குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். நான் அந்த விசாரணைக்குழு முன்பாக ஆஜராவேன் .எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
பிரதமரை சந்திக்க வந்த சாணக்கியனிடம்” நீங்கள் பிரதமரையா சந்திக்க வந்தீர்கள்.லிப்டுக்கு வாருங்கள் அழைத்து செல்கின்றேன் என்றே கூறினேனே. அதாவது பிரதமரை சந்திக்க வந்த சாணக்கியன் எம்.பி. யை பாதுகாப்பாக பிரதரிடம் அழைத்து செல்லவே நான் முயற்சித்தேன். ஆனால் இவரிடம் இந்தளவுக்கு பயம் எரிக்கும் என்பது எனக்குத்தெரியாது என்றார்.