
ஜெனிவா செல்வதை அரசு ஏன் நிறுத்தியது?
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு பதிலளிக்க முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கின்றது என்றும், இதனால் ஜெனிவா செல்வதையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது என்றும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஷ்மன் கிரியெல்லவே இதனை கூறியுள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு போவதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. கடந்த முறையும் போகவில்லை. பொருளாதார குற்றம் தொடர்பில் கூறிய பின்னர் இவர்கள் மனித உரிமைகள் பேரவை பக்கம் போகவே இல்லை. பதிலளிக்க முடியாதுள்ளனர். அங்கு சென்று பதிலளிக்க முடியாது. இம்முறையும் வெளிவிவாகர அமைச்சர் இணையம் ஊடாக பேசுவர் அவ்வளவுதான்.
மனித உரிமைகள் பேரவை கூறிய பொருளாதார குற்றத்தை எமது உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக நாட்டின் எந்தப் பிரஜையும் நீதிமன்றத்தை நாட முடியும் என்றார்.