
முல்லைத்தீவில் உயர்தர மாணவி தற்கொலை
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
18 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இளைஞர் ஒருவரை காதல் செய்துவந்த குறித்த யுவதி தனது காதலனுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
தூக்கிட்ட நிலையில் இருந்த அவரை மீட்ட அயலவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது உடல் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அங்கு வருகை தந்து உடலை பார்வையிட்ட பின் மாணவி தூக்கில் தொங்கிய வீட்டையும் பார்வையிட்டு தாய் தந்தையர்களிடம் விடயங்களை கேட்டறிந்து மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் உடலை உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.