யாழ்.நகரில் சிங்கள ஆதரவு தரப்பின் சுதந்திர தின பேரணி: மேள தாளவாத்தியங்களுடன் கொண்டாட்டம், மதத் தலைவர்களும் பங்கேற்பு

யாழ்.நகரில் சிங்கள ஆதரவு தரப்பின் சுதந்திர தின பேரணி: மேள தாளவாத்தியங்களுடன் கொண்டாட்டம், மதத் தலைவர்களும் பங்கேற்பு

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று இடம்பெற்றது. இலங்கை தேசிய கொடிகளுடன் யாழ்.நகர் பகுதியில் ஒன்று கூடிய சிலர் அமைதியாக சுதந்திர தின பேரணியில் பங்குபற்றினர்.

கொழும்பை மையமாகக் கொண்ட சில சிங்கள அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் மற்றும் யாழ்.சிவில் சமூக நிலையம், யாழ்.மகளிர் முன்னணி, யாழ். இளைஞர் பௌத்த சங்கம், யாழ்.அம்பேத்கர் இயக்கம் மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களால் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து பேரணியை ஏற்பாடு செய்ததாக தெரிய வருகின்றது.

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பொது முடக்கத்திலும் மக்கள் ஈடுப்பட்டுவரும் நிலையில் குறிப்பிட்ட சிலர் சுதந்திர தின கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்.சிவில் சமூக நிலையம் எப்போதுமே இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதுடன், இவ்வாறான ஆதரவு பேரணிகளை கடந்த காலங்களில் நடத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )