ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால இராஜினாமா

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து மஹிந்த அமரவீர, திலங்க சுமதிபால இராஜினாமா

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர்.

ராஜினாமா கடிதங்கள், கூட்டமைப்பின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ‘நாற்காலி’ சின்னத்தில் பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரகாரம், புதிய கூட்டணியை விரைவில் கொழும்பில் தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கட்சிகள், குழுக்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர், புதிய கூட்டணியில் சேர ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதன்படி புதிய பெயரில் கூட்டணியை தொடங்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

45 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘கதிரை’ சின்னத்தின் கீழ் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அந்த முன்னணிக்கு புதிய தலைமைத்துவ சபையொன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாகவும், அடுத்த வாரம் புதிய நிர்வாகிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )