ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க முடியாது

ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க முடியாது

பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் எதிர்க்கட்சி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க முடியாது. பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சி என்றால் ஒருபோது இந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டம் செய்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் எம்.பி.யும் ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகருமான ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

எதிர்க்கட்சி தங்களின் வங்குராேத்து நிலையை மறைப்பதற்காக குறுகிய அரசியல் நோக்கில் மக்களை தூண்டி பொருளாதாரத்துக்கு பாதிப்ப ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்கின்றது . அதன் ஓர் அங்கமாகவே கொழும்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சி என்றால், தற்போதைய நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும். ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவும் உரிமைகளுக்காக பாேராட்டம் மேற்கொள்ளவும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் எதிர்க்கட்சி முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க முடியாது.

அதேநேரம் வேலை நாளான செவ்வாய்க்கிழமை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் மக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கி கொழும்பில் இவ்வாறு ஆர்ப்பட்டம் மேற்கொள்ள எடுத்த நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )