யாழ்ப்பாணம் – கதிர்காம பாத யாத்திரை ஜுன் 4 இல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – கதிர்காம பாத யாத்திரை ஜுன் 4 இல் ஆரம்பம்

யாழ்ப்பாணம்- கதிர்காம பாத யாத்திரை எதிர்வரும் ஜுன் 4 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

கதிர்காமம் ஆடிவேல் திருவிழாவினை முன்னிட்டு , தொண்டமானாறு செல்வச்சந்தியிலிருந்து கதிர்காமம் நோக்கிய பாத யாத்திரையானது வருடாவருடம் இடம்பெற்று வந்தது.

எனினும், கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தீநுண்மியின் தாக்கம் காரணமாக பாதயாத்திரை இடம்பெறவில்லை.

தற்போது காலம் ஓரளவு கனிந்துள்ளது. எனவே, இந்த வருடம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கதிர்காமம் நோக்கி பாதயாத்திரையில் பயணிக்கவுள்ளனர்.

அவர்கள் குழுவாகவும் தனியாகவும் பயணிப்பது வழக்கம். பிரதான பாதயாத்திரை குழுவான வேல்சாமி தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 04.06.2022 காலை 8.00 மணிக்கு தொண்டமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து புறப்படவுள்ளனர்.

இதேவேளை, கதிர்காம கந்தனின் ஆடி மகா உற்சவம் ஆடி மாதம் 28ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆவணி மாதம் 11ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )