
அனுரகுமார வெற்றி பெறுவார் என்பதால் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட மாட்டாது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் என அனைத்து கருத்துக் கணிப்பு அறிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இது ஏனைய கட்சிகளுக்கு பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்ற சந்தேகமும் உள்ளதாக அந்தக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டி கரயலித்த பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என பல கட்சிகளிலும் இருப்பவர்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்ற சந்தேகமும் உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெறும் அனுரகுமார திஸாநாயக்கவை பதவிப்பிரமாணம் செய்ய முடியாதபடி பிரதம நீதியரசரும் கடத்தப்படலாம் என்ற சந்தேகம் உள்ளது.
அதேவேளை கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணி சமூகத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களை மாத்திரமே கட்சியில் இணைத்து வந்தது. எனினும் தேசிய மக்கள் சக்தியில் சமூகத்திற்கு நன்மை செய்யக்கூடிய அனைவரையும் இணைத்து வருகின்றோம்.
தற்போதைய போராட்டத்தில் புறக்கணிக்க எவரும் இல்லை.இன்று சமூகத்தில் உள்ள அனைத்து முற்போக்குக் குழுக்களையும் தேசிய மக்கள் சக்தி உள்வாங்கி வருகிறது.
தற்போதைய அதிகாரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பினரதும் ஆதரவும் தேவை.அதனால்
தற்போதைய போராட்டத்தில் சமூகத்தில் யாரையும் நாம் புறக்கணிக்க முடியாது.
ஜே.வி.பி என்ற வகையில் நாம் சமூகத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவை மட்டுமே உள்வாங்கினோம். ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை என்பதால், தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் முற்போக்கான விஷயங்களைச் செய்யத் தயாராக இருக்கும் அனைத்துக் குழுக்களையும் உள்வாங்குவதாகவும் தெரிவித்தார்.

