ஜே.வி.பி.யுடன் இணையும் டலஸ்!; அவர்கள் ஏற்பார்களா?

ஜே.வி.பி.யுடன் இணையும் டலஸ்!; அவர்கள் ஏற்பார்களா?

சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகபெரும, ஜே.வி.பி தலைமை‌யிலான தே‌சிய மக்கள் சக்தியுடன் இணையும் சாத்தியம் உள்ளதாக பாரளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இணையதள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க தாம் பேச்சுக்களை நடத்திய போது டலஸ், அதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது சுதந்திர மக்கள் சபையில் அனைவராலும் கைவிடப்பட்ட தனி நபராக டலஸ் அழப்பெரும இருப்பதாகவும், இவர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைய வாய்ப்புள்ளதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தி வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறியுள்ள நிலையில் அவர்களால் டலஸ் அழப்பெரும ஏற்றுக்கொள்ளபட்டால் அவருக்கு வாழ்த்துக்களை கூறுவதாகவும் தெரிவி்த்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )