
ஜனாதிபதித் தேர்தல்; ரணில் கூறுவதென்ன?
ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவேனா? இல்லையா? என்பது தொடர்பில் எங்கேயும் கூறவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சி பிரதானிகள் சிலரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் கடந்த வாரத்தில் அமைச்சர்கள் சிலருடனான கலந்துரையாடலின் போது, அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியிடம் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீங்கள் இட்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சிலர் கூறுகின்றனர். இதில் உண்மை உள்ளதா? என்று குறித்த அமைச்சர், ஜனாதிபதிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது பதிலளித்துள்ள ஜனாதிபதி, நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேனா? இல்லையா? என்று எங்கேயும் கூறவில்லை. எவ்வாறாயினும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல்வேறு வேலைத்திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. கடன் மறுசீரமைப்பு போன்ற வேலைத்திட்டங்களை நிறைவு செய்ய குறிப்பிட்ட காலம் தேவையாக உள்ளது என்று அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

