கடந்த சில நாட்களில் நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேரைக் காணவில்லை

கடந்த சில நாட்களில் நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேரைக் காணவில்லை

கடந்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து நான்கு சிறுவர்கள் உட்பட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிங்கள நாளிதழொன்று வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், பொரலஸ்கமுவ வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது மாணவன், நாத குடியிருப்பு தர்மபுரம் பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவன், ஹட்டன் பொல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது மற்றும் யட்டியன சிறுவர் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 வயது சிறுமி ஆகியோர் காணாமல் போன சிறுவர்களில் அடங்குவர்.

குறித்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் இந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி இரவு அவர் தப்பிச் சென்றுள்ளதாக பிரதான கண்காணிப்பாளர் கட்டுநாயக்க பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போனவர்களில் நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதியும், பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவரும், எடர முல்லைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரும் அடங்குவர்.

மேலும், நோர்வூட்டில் வசிக்கும் 82 வயதான பெண், மொரட்டுவையில் வசிக்கும் 75 வயதுடைய ஆண், பள்ளம பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதான கூலித்தொழிலாளி மற்றும் கஹதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஆண் உள்ளிட்ட பலர் இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )